• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொன்சேகாவும், நானும் எதிரிகளானதற்கு இந்தியாவின் 'ரா' அமைப்புதான் காரணம்- சொல்கிறார் ராஜபக்சே

|

Rajapakse with Fonseka
கொழும்பு: செய்வதை எல்லாம் செய்து விட்டு, இப்போது ஆப்பில் சிக்கிய குரங்கின் நிலையில் உள்ள இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே, தனக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையே பூசல் ஏற்பட, மோதல் ஏற்பட, எதிரிகளாக மாறியதற்கு இந்திய உளவு அமைப்பான ரா தான் காரணம். அது செய்த சதியால்தான் தானும், பொன்சேகாவும் எதிரும் புதிருமாக மாறி விட்டதாக பிதற்றியுள்ளார்.

இன்று இல்லாவிட்டாலும் நாளை கண்டிப்பாக தண்டனை உறுதி என்ற நிலையை நோக்கி ராஜபக்சே கும்பல் போய்க் கொண்டிருக்கிறது. ஈழத்தில் அவர்கள் நிகழ்த்திய கொலை வெறியாட்டத்தைப் பார்த்து சர்வதேச சமுதாயம் படிப்படியாக கவலைக்குள் மூழ்க ஆரம்பித்துள்ளது. ஒட்டுமொத்த சர்வதேசமும் ராஜபக்சே கும்பலுக்கு எதிராக திரளும் நாள் அருகில் இல்லாவிட்டாலும், வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள்.

காமன்வெல்த் நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து என அடுத்தடுத்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அடுக்கப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க கோர்ட்டில் ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு போடப்பட்டுள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் வழக்கு தொடரப் போவதாக கூறப்படுகிறது.

இப்படி அடுக்கடுக்காக சர்வதேச அளவில் ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் நெருக்குதல்கள் அதிகரித்து வருவதால் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் குழம்பிப் புலம்பி வருகிறார் ராஜபக்சே.

இந்த நிலையில் சரத் பொன்சேகா மீது திடீர் பாசத்தைக் காட்டுவது போல பேசியுள்ளார் ராஜபக்சே. இருவருக்கும் இடையே பகையை மூட்டி எதிரிகளாக மாற்றியதே இந்தியாவின் உளவு அமைப்பான ரா தான் என்றும் பேசியுள்ளார் அவர்.

இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதிகள் இருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இப்படிக் கூறினாராம் ராஜபக்சே.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே ராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு. இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம்.

சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடத்தி விட்டது. அதன் பின்பு தோ்தலில் போட்டியிடுவதற்காக சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதம அலுவலர் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய முன்வந்த போது அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதை விடப் பெரும் தவறாகும்.

சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே எவ்வளவோ வற்புறுத்தியும் இந்தியாவின் அழுத்தங்களை ஏற்று அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.

அவ்வாறு இல்லாமல் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருந்தால், காலப்போக்கில் சரத் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் சரத் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் ராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.

அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

ராணுவத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி தனது பிறந்த நாளுடன் ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார். அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்று புலம்பினாராம் ராஜபக்சே.

உண்மையில் ஈழத் தமிழ் இனப் படுகொலையில் ராஜபக்சே சகோதரர்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவிலான பங்கு பொன்சேகாவுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராஜபக்சே புலம்புவதைப் பார்த்தால் பொன்சேகாவை தன் பக்கம் மீண்டும் சேர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக மாறி, சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்கும் வழிகளைக் காண முயற்சிப்பாரோ என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.

 
 
 
English summary
Indian Intelligence wing, RAW is the reason for my enimity with Sarath Fonseka, says Lankan dictator Rajapakse. He was speaking to two former generals of Lankan army. He said, RAW misguided me on Fonseka. I trusted their words and tried to defame Fonseka. Now I have realised my mistakes, he said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X