For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதிக் பாட்சா மரணம் தற்கொலையல்ல, கொலை -சிபிஐ

Google Oneindia Tamil News

Sadiq Batcha
சென்னை & டெல்லி: 2ஜி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகவும் சாட்சியாகவும் இருந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதி்க் பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ சந்தேகி்க்கிறது.

இதையடுத்து சாதிக் பாட்சாவின் (37) மரண அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (AIIMS) கோரிக்கை விடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்த சாதிக் பாட்சா, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். 2ஜி வழக்கில் இவர் ஒரு முக்கியப் புள்ளியாக கருதப்பட்டார். இவரிடம் சிபிஐ அதிரடி விசாரணை நடத்தியிருந்தது. இவரது தொழில் அலுவலகங்களில் ரெய்டுகளும் நடத்தப்பட்டிருந்தன.

இந் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் பாட்ஷா. சிபிஐ விசாரணையால் மன உளைச்சலில் தவித்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கூறினர்.

ஆனால் சம்பவம் நடந்து பல மணி நேரத்திற்குப் பிறகுதான் பாட்ஷாவின் மரணம் குறித்த தகவல் வெளியானதால் அதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.

பாட்ஷா மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்ததால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது திமுக அரசு. இந் நிலையில் பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது.

வீட்டில் சாதிக் பாட்சாவின் உடல் இருந்த நிலையைப் பார்த்தால், அது தற்கொலை போலத் தெரியவில்லை என்றும், அவரது உடலை பிரதேசப் பரிசோதனை செய்த அரசு டாக்டர் டெக்கால், இது மூச்சுத் திணறடிக்கப்பட்டு (asphyxia) ஏற்பட்ட மரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாட்சாவின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் மருத்துவர் கூறியுள்ளார். எனவே, சிபிஐக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பாட்சாவின் குடல் பாகங்கள் குறித்த மருத்துவ ஆய்வறிக்கைக்காக சிபிஐ காத்துக் கொண்டுள்ளது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டது போன்ற சூழல் காணப்பட்டாலும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான முகாந்திரங்கள் தற்போது கிடைத்துள்ளன. எனவே உள்ளூர் போலீஸார் கூறியது போல இது தற்கொலை அல்ல, கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். குற்றம் நடந்த இடம், அதற்கான சூழல், கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். இருப்பினும் இதை உறுதிப்படுத்திக் கொள்ள தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

ஒரு டாக்டர்கள் குழுவை அமைத்து சாதிக் பாட்சாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் கோர சிபிஐ முடிவு செய்துள்ளது.

English summary
A top CBI offi­cial has disclosed that, prima facie, the death of Sadiq Batcha, a close associate of jailed former Telecom Minister A Raja, appears to be a case of murder not suicide as the local Chennai police had claimed. The agency's assumptions are based on the close scrutiny of the 'scene of crime' and other circumstantial evidence collected during investigation. The CBI took over the investigation from the Tamil Nadu police on April 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X