For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி மாணவ, மாணவியருக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரையிலான மாணவ, மாணவியர் இந்த இலவச பஸ் பாஸ்களைப் பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.

அதேபோல அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியருக்கும் இலவசமாக பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது சில மாணவ, மாணவியருக்கு ஜெயலலிதா தனது கையால் இலவச பஸ் பாஸ்களை வழங்குவார்.

English summary
CM Jayalalitha will kickstart the free bus pass distribution in TN tomorrow. Students from std 1 to +2 will get the free bus pass. And also Govt college students and govt polytechnic students are eligible for the free pass.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X