For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ்

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்தில் முடிவடைந்தது. இதர ஆசிய சந்தைகளில் சாதகமான போக்கு நிலவியதால், சென்செக்ஸில் வர்த்தக நேர முடிவில் 51.68 புள்ளிகள் உயர்ந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 18,896.24 புள்ளிகளில் தொடங்கியது.

தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 23.3 பு‌ள்‌ளிக‌ள்‌ உயர்ந்து 5650.5 பு‌ள்‌ளிகளாக ‌நிலைப்பெற்றது.

மும்பை பங்குச் சந்தையில் டி.எல்.எப். , பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல்ஸ், ஆர்ஐஎல், ரிலையன்ஸ் இன்ப்ரா, ஐ.சி.ஐ.சி.ஐ, சிப்லா, மாருதி, ஹிண்டல் கோ, டாடா பவர், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் கைமாறின.

ஹீரோ ஹோண்டா,ஜிண்டல் ஸ்டீல்ஸ்,டாட்டா ஸ்டீல் ,டிசிஎஸ் போன்றவை இன்று நஷ்டத்தில் விற்பனையான பங்குகளில் முக்கியமானவை.

English summary
The BSE benchmark Sensex climbed about 52 points, led by gains in real estate and consumer durable stocks amid a firm global trend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X