For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தும் ரயில்வே

By Shankar
Google Oneindia Tamil News

Train
டெல்லி: இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. பயணிகள் தாங்களாகவே முன்பதிவு செய்ய முடியும்.

ஐஆர்சிடிசி இ-டிக்கெட் போல் இல்லாமல், இந்திய ரயில்வேயின் புதிய சேவையில் பயண முகவர்களுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் இடமில்லை. தனிப்பட்ட பயனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐஆர்சிடிசி சேவையில் பயண முகவர்கள் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

புதிய இ-டிக்கெட் சேவையின்படி, தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் முதல்முறை தாங்களாகவே பதிவுசெய்துகொண்டு இந்த சேவையைப் பெறலாம். பதிவு செய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

தொடக்கத்தில் ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 8 பரிமாற்றங்கள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 5 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 10 ரூபாயும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஐஆர்சிடிசியில் தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 10 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 20 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த புதிய சேவையை www.indianrailways.gov.in இணையதளத்தின் மூலம் பெறலாம்.

இந்த சேவை தொடங்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

English summary
Almost six months after the government announced its plan to launch a new portal for railway tickets, the Indian Railways is all set to roll out the new web service.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X