For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி விசாரணையை திசை திருப்பும் அமைச்சர் முரளி தியோரா! - சிபிஐ புகார்

By Shankar
Google Oneindia Tamil News

Murali Deora
டெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் எஸ்ஸார் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனங்கள் மீதான விசாரணையை மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை திசை திருப்ப முயற்சிப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

2 ஜி விவகாரத்தில் சட்டவிரோதமாக ஆதாயம் பெற்ற நிறுவனங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ள எஸ்ஸார் நிறுவனம் லூப் டெலிகாம் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளையும், வோடபோன் - எஸ்ஸாரில் 33 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

இந்த நிறுவனங்களின் தொடர்புகள், எந்த அளவு சட்டவிரோதமாக ஆதாயம் பெற்றன என்பது குறித்து சிபிஐ வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விசாரணை முடித்துவிடுவதாக உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், இதில் மூக்கை நுழைத்துள்ளது கம்பெனிகள் விவகாரத்துறை.

லூப் டெலிகாமில் எஸ்ஸாருக்கு 10 சதவீத பங்குகள் இல்லை என்றும், வெறும் 3 சதவீதம்தான் உள்ளதென்றும் கம்பெனிகள் விவகாரத்துறையின் அமைச்சர் முரளி தியோரா திடீரென அறிவித்துள்ளார்.

இது விசாரணையை திசை திருப்பும், தாமதப்படுத்தும் முயற்சி என்றும், முரளி தியோராவின் செயல் துரதிருஷ்டவசமானது என்றும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.

English summary
The crossholding of shares of Essar in the Loop Telecom was again in focus with CBI terming as "unfortunate" the letter issued by the Corporate Affairs Ministry claiming that the oil major had less than 10% stakes in the telecom venture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X