For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூசிலாந்தி்ல் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரி்ககை

By Siva
Google Oneindia Tamil News

கெர்மாடெக்: நியூசிலாந்தி்ல் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நேரப்படி இன்று காலை 7.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணி). இது ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து அருகே உள்ள கெர்மாடெக் தீவுகள், ரவூல் தீவில் சுனாமி அலைகள் தாக்கின. ஆனால், மக்கள் நடமாட்டம் இல்லாத இந்தத் தீவுகளில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

நிலநடுக்கத்தில் மையம் கடலுக்கடியில் 20 கிமீ ஆழத்தில் இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து, டோங்கா ஆகிய நாடுகளிலும் கடும் அதிர்வு ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கெர்மாடெக் தீவுகள், நியூசிலாந்து மற்றும் டோங்கா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சுனாமி நிலநடுக்கத்தின் மையப் பகுதியை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடும். எனவே, அங்குள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மையம் தெரிவித்தது.

ஆனால் 8 மணி அளவில் நியூசிலாந்து, டோங்காவில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

English summary
A strong quake measuring 7.6 in th Ritcher scale rocks Kermadec Islands region of New Zealand at 1903 GMT on Wednesday. Tsunami warning was given but withdrawn later. No damages have been reported so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X