For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 நாட்களில் 30 நிலமோசடி புகார்கள்: பரபரக்கும் தமிழகம்

By Siva
Google Oneindia Tamil News

Land Cheat
சென்னை: தமிழகத்தில் தற்போதைய ஹாட் டாபிக் நில மோசடி தான். கடந்த 7,8, 9 ஆகிய 3 நாட்களில் மட்டும் 30 நில மோசடி புகார்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் நில மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நிலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நில மோசடி தொடர்பாக காவல் நிலையங்களில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டது.

இந்த பிரிவு அமைக்கபப்ட்ட நாளில் இருந்து நில மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கடலூரில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றபிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் நில மோசடி தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.

நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பிரிவில் உரிய ஆவணங்களுடன் புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் கடந்த 7,8, 9 ஆகிய 3 நாட்களில் மட்டும் 30 நில மோசடி புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
Cuddalore police have received 30 complaints about land fraud in just 3 days. As per CM Jayalalitha's order, police have set up a separate team to handle land fraud cases in all the districts in Tamil Nadu. This special team is busy in investigating land fraud cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X