For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தில்ஷன் கொலையாளி கைது: சிபி-சிஐடி போலீசாருக்கு முதல்வர் பாராட்டு

By Siva
Google Oneindia Tamil News

CB-CID Team and Jayalalitha
சென்னை: 13 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற கொலையாளியை கைது செய்த சிபி-சிஐடி போலீசாரை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கடந்த 3-ம் தேதி தீவுத்திடலில் உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் பாதாம் பழம் பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் தில்ஷன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

சிபி-சிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் கந்தசாமி ராமராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் சிறுவனை சுட பயன்படுத்திய துப்பாக்கியை கூவம் ஆற்றில் இருந்து கைபற்றினர்.

சிபி-சிஐடி போலீஸ் பிரிவின் கூடுதல் டிஜிபி சேகர் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது ஒரு வாரத்தில் குற்றவாளியைக் கைது செய்த குழுவைப் பாராட்டி முதல்வர் சான்றிதழ்கள் வழங்கினார்.

English summary
Tamil Nadu CM Jayalalitha has appreciated the CB-CID team for acting quickly in Dilshan murder case. She has given certificates to the team which has arrested the culprit in a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X