For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊக்கமருந்து விவகாரம்: பெங்களூர் விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் போதை தடுப்புப் பிரிவு ரெய்டு

By Siva
Google Oneindia Tamil News

Doping
பெங்களூர்: தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்திய தடகள விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் போதைப் பொருள் மற்றும் ஊக்க மருந்து உட்கொண்டு சிக்கிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் விளையாட்டு ஆணைய அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் பாட்டியாலா அலுவலகத்தில் ரெய்ட் நடந்தது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளிவில் தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் 4 பேர் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்திற்கு வந்தனர்.

டாக்டர் அன்குஷ் குப்தா தலைமையிலான 4 பேர் கொண்ட தேசிய போதை தடுப்பு பிரிவு அணி கடந்த 9ம் தேதி பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் (National Institute of Sports) திடீர் சோதனை நடத்தியது. அங்கிருந்த வீரர்களிடம் இருந்து சிறுநீர் மாதிரிகள் பெறப்பட்டன.

8 தடகள வீரர்-வீராங்கனைகள் ஊக்கமருந்து எடுத்துக் கொண்ட விவகாரம் வெளியாகி உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் வந்துள்ளது தான் இந்த அதிரடி சோதனைகளுக்கு காரணம்.

English summary
National Anti-Doping Agency (NADA) officials have conducted a surprise raid at the Sports Authority of India's centre in Bangalore at 8.00 am today. The results of this raid is expected to come in the evening. Earlier NADA team raided National Institute of Sports in Patiala on july 9.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X