For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்-வீராங்கனைகள் 12 பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டிகள் ஜூன் மாதம் 25-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடந்தது. இதில் இந்தியாவில் இருந்து 245 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் இந்தியா 79 தங்கம், 76 வெள்ளி, 97 வெண்கலப் பதக்கங்கள் வென்றது.

இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் 12 பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர். இதில் 3 தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.

தமிழகத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் ரோலர் ஸ்கேட்டிங்கில் 2 தங்கம், 2 வெள்ளியும், அர்ச்சனா சைக்கிளிங்கில் 1 தங்கம், 1 வெண்கலமும், ஹரி சீனிவாசன் ஹேண்ட்பால் போட்டியில் 1 வெள்ளியும், கோகிலா தடகளத்தில் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

English summary
Special olympics for the mentally challenged people had been conducted in Athens from june 25- july 4. 245 member team from India participated in this and won 79 gold, 76 silver and 97 bronze medals. In this TN players have won 12 medals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X