For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சரவையில் 2 பேரை சேர்ப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவெடுப்போம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அமைச்சரவை மாற்றம் இன்னும் முழுமை அடையவில்லை. தயாநிதி மாறன், ராசாவுக்குப் பதில் புதிய அமைச்சர்களை சேர்க்குமாறு திமுக கோரவில்லை. அமைச்சரவையில் திமுகவுக்கான 2 பேரை நியமிப்பது குறித்து கோவையில் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் திமுகவுக்கான 2 அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் திமுக அமைச்சரவையில் சேர விரும்பவில்லையோ என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியிடம் இன்று இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், அமைச்சரவை மாற்றம் இன்னும் முழுமை அடையவில்லை.

தயாநிதி மாறன், ராசாவுக்குப் பதில் புதிய அமைச்சர்களை சேர்க்குமாறு திமுகவிடமிருந்து கோரிக்கை விடப்படவில்லை.

அமைச்சரவையில் திமுக அமைச்சர்களை சேர்ப்பது, மத்திய அரசுடனான பிரச்சினைகள் குறித்து கோவையில் ஜூலை 23ம் தேதி தொடங்கும் திமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்களில் விவாதித்து முடிவெடுப்போம்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து சந்தித்தபோது அவரிடம் கனிமொழியை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக நான் ஆலோசனை நடத்தவில்லை என்றார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has said that, The cabinet reshuffle is not yet complete. He said that, we will take the decision of joining UPA ministry and issues related to Centre in DMK's general council meeting to be held in Coimbatore on July 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X