For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2012-க்குள் 57000 புதிய பணியாளர் நியமனம்! - இன்போஸிஸ் அறிவிப்பு

By Shankar
Google Oneindia Tamil News

Iinfosys
மைசூர்: வரும் காலாண்டில் 12000 பணியாளர்களையும், அடுத்த ஆண்டு 2012-ல் 45000 பேரையும் புதிதாக நியமிக்கப் போவதாக இன்போஸிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைசூரில் இந்தத் தகவலை தெரிவித்தார் இன்போஸிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ் கோபாலகிருஷ்ணன்.

அவர் மேலும் கூறுகையில், "இன்போஸிஸ் நிறுவனத்தில் இப்போது 1.33 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2 லட்சம் வரை உயரும் நிலை உருவாகியுள்ளது.

இந்த காலாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டில் மொத்தம் 56 ஆயிரம் புதிய பணியாளர்களை நியமிக்கப் போகிறோம். இதில் 26000 பேருக்கு ஏற்கெனவே ஆஃபர் கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது," என்றார்.

இன்போஸிஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டு முதல் காலாண்டு லாபம் 15.72 சதவீதம் அதிகரித்திருந்தது. நிகர லாபம் ரூ 1722 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆனால் இந்தக் காலாண்டில் மட்டும் 7000 பேர் இன்போஸிஸிலிருந்து விலகியிருந்தனர். இதைச் சரிகட்ட 9922 பேரை வேலைக்கு எடுத்தது இன்போஸிஸ். ஆக கடந்த காலாண்டில் 2922 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.

English summary
Keeping up the hiring momentum, the country's second largest software exporter Infosys on Tuesday said it will hire 12,000 in Q2 and a yearly target at 45,000 in 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X