For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசின் கூடுதல் வரி: சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்

Google Oneindia Tamil News

Cooking Oil
விருதுநகர்: தமிழக அரசின் கூடுதல் வரியால் சமையல் எண்ணெய் விலை ரூ.6 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது,

நிதி ஆதாரத்தினை பெருக்குவதற்காக வரி விகிதங்களை உயர்த்தியதுடன், புதிதாக பல பொருட்களுக்கும் தமிழக அரசு வரி விதித்துள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 3 ஆயிரத்து 900 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 6 வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாமாயில், சன் பிளவர் ஆயில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.5 வரை அதிகரிக்கும்.

சமையல் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரி பொதுமக்களை மிகவும் பாதிக்கும். அரிசிக்கு அடுத்தப்படியாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவது சமையல் எண்ணெய் தான். வரி உயர்வால் ஜவுளித்துறை, வணிக தொழில்நுட்பத்துறை பெரிதும் பாதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி சமையல் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத விற்பனை வரியை அரசு கைவிட வேண்டும் என்றனர்.

English summary
Since the Tamil Nadu government has increased the tax for certain items, cooking oil prices may increase upto Rs. 6. So, merchants have requested the government to cancel the newly implemented 5% sales tax for the cooking oils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X