For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவை உலுக்கிய குண்டுவெடிப்புச் சம்பவங்கள்-ஒரு பார்வை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவை வேட்டைக் காடாக்கி பல குண்டு வெடிப்புச் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார்கள் தீவிரவாதிகள்.

இதுவரை இந்தியாவில் நடந்த பல முக்கிய வெடிகுண்டு சம்பவங்களின் பட்டியல்:

வாரனாசி, டிசம்பர் 7, 2010: கங்கை நதிக்கரையோரம் உள்ள தஷஷ்வமேத் மற்றும் ஷிட்லா மலைப்பகுதிகளுக்கு இடையே நடந்த குண்டுவெடிப்பில் 2 வயது சிறுமி கொல்லப்பட்டாள், 25 பேர் காயம் அடைந்தனர்.

புனே, பிப்ரவரி 13, 2010: ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலியாகினர், சுமார் 60 பேர் காயமடைந்தனர்.

மும்பை, நவம்பர் 26, 2008: ஓபராய், தாஜ் ஹோட்டல்கள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிஎஸ்டி ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகள், கையெறி குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

அசாம், அக்டோபர் 30, 2008: அசாம் முழுவதும் நடந்த 18 குண்டுவெடிப்புகளில் குறைந்தது 77 பேர் பலியாகினர், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

இம்பால், அக்டோபர் 21, 2008: மணிபூர் போலீஸ் கமாண்டோ காம்பிளக்ஸ் அருகே நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

மாலேகான், மகாராஷ்டிரா, செப்டம்பர் 29, 2008: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட்டில் மோட்டார்பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

மோடசா, குஜராத், செப்டம்பர் 29, 2008: மசூதி அருகே ஒரு மோட்டார்சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குறைந்த சக்தியுள்ள குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார், பலர் காயமடைந்தனர்.

புது டெல்லி, செப்டம்பர் 27, 2008: மெஹ்ரௌலியில் உள்ள மார்க்கெட் மீது குண்டு வீசப்பட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

புது டெல்லி, செப்டம்பர் 13, 2008: நகரம் முழுவதும் நடந்த 6 குண்டுவெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

அகமதாபாத், ஜூலை 26, 2008: 2 மணி நேரத்திற்குள் நடந்த 20 ஒருங்கிணைக்கப்பட்ட குண்டுவெடிப்புகளில் 57 பேர் கொல்லப்பட்டனர்.

பெங்களூர், ஜூலை 25, 2008: குறைந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜெய்பூர், மே 13, 2008: தொடர் குண்டுவெடிப்புகளில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

ராம்பூர், ஜனவரி 2008: சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

ராஜஸ்தான், அக்டோபர் 2007: ரமலான் மாத்தில் அஜ்மீர் ஷரீபில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலியாகினர்.

ஹைதராபாத், ஆகஸ்ட் 2007: தீவிரவாத தாக்குதலில் 30 பேர் பலியாகினர், 60 பேர் காயமடைந்தனர்.

ஹைதராபாத், மே 2007: மக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

பிப்ரவரி 19, 2007: இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் குறைந்தது 66 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்.

மாலேகான், செப்டம்பர் 2006: மசூதி ஒன்றில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 30 பேர் பலியாகினர், 100 பேர் காயம் அடைந்தனர்.

ஜூலை 2006: மும்பை ரயில்களில் 7 குண்டுகள் வெடித்ததில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமடைந்தனர்.

வாரனாசி, மார்ச் 2006: ஒரு கோவில் மற்றும் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

புது டெல்லி, அக்டோபர் 2005: தீபாவளிக்கு முன்தினம் புது டெல்லியின் முக்கிய மார்க்கெட்டுகளில் நடந்த 3 குண்டுவெடிப்புகளில் 62 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

English summary
India has been witnessing blasts and terrorist attacks for a long time. Above is the chronological order of the major blasts occured in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X