For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியை ஆட்டிப் படைக்கும் பிகார் அதிகாரிகள்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு காலத்தில் மத்திய அரசின் முக்கிய துறைகளின் மூத்த அதிகாரிகளாக தமிழர்கள் இருந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கேரள அதிகாரிகள் வசம் முக்கிய துறைகள் போயின. இப்போது, பிகார் மாநில அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன முக்கிய இலாகாக்கள்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிகாரைச் சேர்ந்த அதிகாரிகள் இத்தனை பேர் ஒரே நேரத்தில் முக்கிய பதவிகள் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, மத்திய அரசின் முக்கியத் துறைகளான உள்துறை (ராஜ்குமார் சிங்), பாதுகாப்புத்துறை (சசிகாந்த் சர்மா), நெடுஞ்சாலைத் துறை (ஏ.கே.உபாத்யாயா), ஊரக வளர்ச்சித் துறை (பி.கே.சின்ஹா), நகர்ப்புற வளர்ச்சித் துறை (நவீன் குமார்) ஆகியவற்றின் செயலாளர்களாக, இவர்கள் அமைச்சர்களுக்கு இணையான அதிகாரம் கொண்டவர்கள், பிகாரைச் சேர்ந்தவர்கள் தான் உள்ளனர்.

இவர்களைத் தவிர கூடுதல் செயலாளர்களாக 6 பேரு்ம், இணைச் செயலாளர்களாக 17 பேரும் பிகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளே உள்ளனர்.

மிக மூத்த அதிகாரியான எம்.என்.பிரசாத், பிரதமர் அலுவலக செயலாளராகவும், ஏ.என்.பி. சின்ஹா, பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளராகவும் உள்ளனர்.

மேலும் திட்டக் கமிஷனின் மூன்று அதிகாரிகளாகவும் பிகாரைச் சேர்ந்தவர்களே உள்ளனர்.

English summary
Bihari babus are virtually dominating the corridors of power in New Delhi. Nine Bihar-cadre IAS officers are heading as many crucial ministries, including home, defence, road transport and highways and rural development. Six IAS officers are serving as additional secretaries, while 17 others are in the rank of joint secretaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X