For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசிஎஸ் லாபம் ரூ.2,415 கோடி-பங்குகள் விலை 'விர்ர்ர்'!!!

By Chakra
Google Oneindia Tamil News

TCS Logo
மும்பை: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ், 2011-12 நிதியாண்டில் முதல் காலாண்டில் ரூ. 2,415 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதையடுத்து மும்பை பங்குச் சந்தையில் இந்த நிறுவன பங்குகளின் மதிப்பு இன்று 20 சதவீதம் வரை அதிகரித்து ரூ. 1,350 ஆக உயர்ந்தது. டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் அந்த நிறுவனம் ஆரம்பித்ததில் இருந்து இவ்வளவு அதிக விலைக்குப் போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிசிஎஸ்சின் வருமானம் 31 சதவீதம் அதிகரித்து ரூ. 10,797 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் 26.7 சதவீதம் அதிகரித்து ரூ.2,415 கோடியைத் தொட்டுள்ளது.

இதையடுத்து இதன் பங்குகளின் விலையும் 20 சதவீதம் அதிகரித்து ரூ. 1,350 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 1 மதிப்பு கொண்ட (face value) ஒரு பங்குக்கு ரூ. 3 வரை டிவிடண்ட் வழங்குவதாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.

English summary
TCS posted a 26.7% rise in net profit to Rs 2,415 crore for the first quarter of FY2011-12. Its revenues grew by 31.4% to Rs 10,797 crore for the period under review. The board has proposed a dividend of Rs 3 apiece on shares of Re 1 face value.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X