For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை மாவட்டத்தில் நெல் நடுவைப் பணிகள் தீவிரம்

Google Oneindia Tamil News

Paddy cultivation
செங்கோட்டை: நெல்லை மாவட்ட பகுதிகளில் நடுவை பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கார் நெல் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் போதுமான அளவு டிஏபி உரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலேயே நெல்லை மாவட்டம் விவசாயத்தை நம்பி வாழும் மாவட்டமாகும். குறிப்பாக செங்கோட்டை, மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.

இந்நிலையில் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கார் பருவத்திற்கான நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. உழுவது, நடவுக்கான தொழி அடிப்பது, மற்றும் நடுவை பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

இதற்கான பணிகளில் விவசாயிகளும், விவசாய கூலிகளும் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் டிஏபி உரத்திற்கு கடும் தட்டுபாடு நிலவி வருவதாக விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய 30 ஆயிரம் டன் டிஏபி உரம் வந்து சேராததால் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனால் பல இடங்கலில் விவசாயிகள் கூடுதல் விலைக்கு டிஏபி உரம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் நலன் கருதி தட்டுபாடின்றி டிஏபி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.

English summary
Sowing works have started in Nellai district. Paddy cultivation is the main agriculture in the district. Senkottai and other are farmers are busy sowing the padd crops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X