For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரத்து அதிகரிப்பு:. காய்கறி விலைகள் குறைந்தன!

By Shankar
Google Oneindia Tamil News

Vegetables
சென்னை: சென்னையின் பிரதான காய்கறி அங்காடியான கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

சாம்பார் வெங்காயம், கேரட், உருளைக் கிழங்கு, அவரைக்காய் ஆகியவை தவிர பிற காய்கறிகள் அனைத்தின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

அதேபோல மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களின் விலை ஓரளவு குறைந்துள்ளது.

கத்தரிக்காய் கிலோ ரூ. 5 க்கு கிடைக்கிறது. தக்காளி ரூ.7 முதல் 10 வரை விற்கப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் வரத்து அதிகரிப்புதான் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். தினமும் 450 லாரிகளில் காய்கறிகள் வந்து குவிவதால் விலை நிலையில்லாமல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் சில்லறை விற்பனையாளர்கள் விலையை சற்றும் குறைக்காமல் உள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

English summary
The price of vegetables in Koyambedu wholesale market has been declined drastically due to the heavy inflow of vegetables.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X