For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகத்திலிருந்து பெருமளவில் காவிரியில் நீர் திறப்பு- ஓகனேக்கலில் வெள்ள அபாயம்

Google Oneindia Tamil News

தர்மபுரி: கர்நாடகத்தி்ல தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபிணி அணையிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படட்டுள்ளது. இதனால் ஓகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதால் பரிசல் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தற்போது கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கபிணி அணைக்கு தற்போது வினாடிக்கு 30,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்கிருந்து விநாடிக்கு 22,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் தற்போது ஓகனேக்கலை வந்தடையத் தொடங்கியுள்ளது. இதனால் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரிசல் ஓட்டுவதற்குகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
Massive water release from Kabini reservoir has forced officials to ban boat ride in Hoganekkal falls. The Kabini water also reaching Mettur dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X