For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரி அருகே காகித ஆலையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி அருகே காகித ஆலையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள்.

புதுச்சேரி அடுத்து உள்ளது திருவண்டார் கோயிலில் . இங்கு தனியாருக்கு சொந்தமான காகிதம் தயார் செய்யும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை கடந்த இரண்டு மாதங்களாக இயங்காமல் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

இந் நிலையில், இந்த ஆலையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் கரூர், ஈரோட்டை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

காகித கூழ் தயார் செய்யும் காஸ் பைப் லைனை தொழிலாளர்கள் அப்புறப்படுத்திய போது அதில் இருந்து காஸ் வெளியாகியுள்ளது. இதில் கரூரை சேர்ந்த கோபி (21) தங்கராசு (36) ஈரோட்டை சேர்ந்த மணிமாறன் (38) ஆகிய மூன்று பேர் சம்ப இடத்திலேயே மூச்சு திணறி உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 5 பேரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
3 workers were killed in Puducherry paper mill. The workers Gopi, Thangarasu and Manimaran inhaled poisionus gas emanted from pipline and died immediately. 5 other workers are admitted in JIPMER hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X