For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சி: திமுக குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

கரூர்: மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலியில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் வீடுகளுக்கான சாதாரண மின் இணைப்புக்குரிய கட்டணம் 5 ஆண்டு காலமாக உயர்த்தப்படவே இல்லை.

எனினும் அதிகபட்ச மின் வினியோகத்தை அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று தேர்தல் நேரத்தில் அதிமுக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்துத் தரப்பினருக்குமான மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.

கட்டண உயர்வு விபரத்தை தயாரித்து தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அந்த நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

English summary
DMK has told that the ruling ADMK government is taking actions to increase the electricity rate for all uses. ADMK promised zero powercut during election time but it has not kept its promise, accused DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X