For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்மநாபசுவாமி கோயில் சுற்றத்தாருக்கு அடையாள அட்டை: கேரள போலீஸ் முடிவு

By Chakra
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோயிலை சுற்றி, 800 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு, அடையாள அட்டை வழங்க, கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொக்கிஷம் சமீபத்தில், கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலின் பாதுகாப்பில், கேரள போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக, கோயிலுக்குள் 34 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், மெட்டல் டிடெக்டர்கள், லேசர் சென்சார்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு கருவிகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கோயிலின் பாதுக்காப்பை பலப்படுத்தும் வகையில், கோயிலை சுற்றி வசிப்பவர்கள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணி புரிபவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில், கோயில் சுற்றிலும் 800 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு, அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளனர்.

கோயிலுக்கு வழங்க உள்ள பாதுகாப்பு விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. உச்சநீதிமன்றம் அதற்கு அனுமதி அளி்க்கும் பட்சத்தில், அடையாள அட்டை வழங்கும் துவங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

English summary
Kerala police has decided, to give ID cards for the prople residing near to (800 Meter) Pathmanabha Swamy Temple. After the permission of supreme court, the ID cards will be issued
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X