For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாய்பாபா ஆசிரமத்தில் 7 கிலோ தங்கமாலைகள்: சென்ட், சோப்பு, ஷாம்பூ குவியல்

By Siva
Google Oneindia Tamil News

புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் ஆசிரமத்தில் இருந்து 7 கிலோ எடைகொண்ட 2 தங்க மாலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் ஆசிரமத்தில் இருந்து கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி எடுக்கப்பட்டு வருகிறது. பணமும் கோடிக்கணக்கில் அங்கு கிடக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்குளுக்கு முன்பு 3-வது முறையாக ஆசிரமத்தில் உள்ள சொத்துக்கள் எண்ணப்பட்டன. அப்போது 6-7 கிலோ எடை கொண்ட 2 தங்க மாலைகள், ஏராளமான ஷாம்பூ பாட்டில்கள், ஷேவிங் செட்டுகள், சோப்புகள், 5 ஆயிரம் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சென்ட் பிரியர் பாபா....

பாபாவுக்கு வாசனைத் திரவியம் என்றால் அலாதிப் பிரியம் என்று பாபாவுக்கு நெருக்கமாக இருந்த ஒருவர் தெரிவித்தார்.

பாபாவுக்கு பக்தர்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்திருந்தாலும், அவர் அவற்றைப் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்துள்ளார். அந்த 2 தங்க மாலைகள் ஒரு மோஜைக்கு அடியில் பாக்கெட் கூட பிரிக்கப்படாமல் இருந்துள்ளது.

பாபாவின் 75-வது பிறந்தநாளைக்கு பக்தர் ஒருவர் 75 வெள்ளி குவளைகளை பரிசாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு குவளையும் 700 கிராம் எடையுடையது. அந்த பெட்டியைக் கூட திறக்காமல் வைத்திருந்திருக்கிறார் பாபா என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாபாவின் கட்டில் தங்கம் மற்றும் வெள்ளியானால் ஆனது என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

English summary
Officials have recovered 2 golden garlands weighing 6-7 kgs, 5,000 branded watches, shampoo bottles, soaps, shaving kits, dry fruits from Sai Baba's ashram in Puttaparthi. This is the third time officials have recovered valuables from Baba's ashram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X