For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தபால்காரர் மெத்தனம்-நர்சிங் படிப்பை இழந்த ஏழை மாணவி

Google Oneindia Tamil News

ஒரத்தநாடு: தபால்காரர் ஒருவரின் காலத்தாமதமாக தபால் பட்டுவாடா செய்ததால், கிராமப்புறத்து ஏழை மாணவி தனது நர்சிங் படிப்பு படிக்கும் வாய்ப்பை இழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த மழவராச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் பிரியா. பாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிடித்து பிளஸ்2 தேர்வில் 1040 மதிப்பெண் பெற்றார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பிரியா, பி.எஸ்.ஸி நர்சிங் படிக்க விண்ணப்பித்திருந்தார்.

இதை பரிசீலித்த சென்னை பாராமெடிக்கல் கோர்ஸ் தேர்வு கமிட்டி, ஜூலை 20ம் தேதி மதியம் 2 மணிக்கு, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுரியில் நடக்க உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ள கடிதம் அனுப்பியது.

கடந்த 18ம் தேதி காலையில் தஞ்சாவூர், கோட்டைத்தெரு தபால் நிலையத்தை அடைந்த அந்த கடிதம், அன்று மாலையே பிரியாவுக்கு போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். அதற்கு அடுத்தநாளான 19௦ம் தேதியாவது டெலிவரி் செய்திருக்கலாம். ஆனால் தனது பணியில் மந்தமாக செயல்பட்ட தபால்காரர், ஆற அமர 22ம் தேதி கடிதத்தை பிரியாவிடம் கொடுத்துள்ளார்.

கடிதம் தாமதமாக வந்ததற்கான காரணத்தையும் தபால்துறை அதிகாரிகளால் தெரிவிக்க முடியவில்லை. இந்நிலையில், தபால்துறையின் மெத்தனத்தால், பாதிக்கப்பட்ட பிரியா, அஞ்சல்துறை மீது வழக்குத் தொடர உள்ளார்.

English summary
By the assault of the postman, a poor family girl losed his chance to study nursing in Thanjavur. The girl has decided to file a case against the postal department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X