For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பணவீக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் அபாயம்! - ரத்தன் டாடா கவலை

By Shankar
Google Oneindia Tamil News

Ratan Tata
நாட்டின் பணவீக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

2010-2011-க்கான தங்கள் நிறுவன ஆண்டறிக்கையில் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளதாவது:

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிப்பது பணவீக்கம்தான். பணவீக்கத்துக்காக வட்டிகளை உயர்த்திக் கொண்டே போவதும் நல்லதல்ல. இது மோசமான சூழலை உண்டாக்கிவிடும்.

இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் பணவீக்கம் உயர்வது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஆசியாவின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதன் விளைவாக 2011-2012-ல் நிச்சயம் இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆட்டோமொபைலே துறையில் ஏற்கெனவே வீழ்ச்சி தொடங்கிவிட்டது.

இந்த இரு நாடுகளின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருந்தது. அதேநேரம் அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை மீட்சிக்காக போராடின. எனவே உலகப் பொருளாதாரம் இந்தியா, சீனாவின் வளர்ச்சியைச் சார்ந்துள்ளது," என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.

English summary
Growth of the economy is highly correlated to the inflation. Constant rate hikes to overcome sticky inflation might affect many sectors of the economy. Ratan Tata, Chairman of Tata Group warned that rising inflation could cause another major slowdown in emerging economies like India and China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X