For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாபர்சேட், கருணாநிதியின் முன்னாள் உதவியாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்ட்!

By Chakra
Google Oneindia Tamil News

Jaffer Sait
சென்னை: திமுக ஆட்சியில் நடந்த வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அந்த ஆட்சியில் தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் உள்ளிட்ட 9 அதிகாரிகளின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்த இவர் ஜெயலலிதா முதல்வரானதும் மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக்கப்பட்டார்.

இந் நிலையில் இவரது சென்னை அண்ணா நகர் 14வது மெயின் ரோடு ஆர் பிளாக்கில் உள்ள வீட்டில் இன்று காலை 8 மணி முதல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனிபர் ஆகியோர் பெயரில் தியாகராய நகரில் உள்ள லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடங்களை முறைகேடாக வாங்கி அதில் கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக புகார் தரப்பட்டிருந்தது.

இந்தப் புகாரைத் தந்தவர்,லஞ்ச ஒழிப்புத் துறையில் அலுவலக உதவியாளாராகப் பணியாற்றும் சங்கர். அதன் அடிப்படையில் இந்த சோதனையை போலீசார் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது வீட்டிலிருந்த யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சோதனையையொட்டி அவரது வீட்டின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஜாபர் சேட்டின் மாமனார் வீட்டில் சோதனை:

அதே போல பெரியகுளத்தில் வசித்து வரும் ஜாபர் சேட்டின் மாமனார் சலீம் வீட்டிலும் ரெய்ட் நடந்தது. சலீ்ம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் ஜாபர் சேட்டின் நண்பர் ராஜு, தியாகராய நகரைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் நிஜாமுதீன் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அதே போல கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பி.பாண்டியன், கணேசன், வினோதகன், கருணாநிதியின் தனி உதவியாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம், ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர் மற்றும் இன்னொரு உதவியாளர் அறிவழகன் ஆகியோர் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன.

மொத்தத்தில் வீடுகள், அலுவலகங்கள் என 10 இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன. 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த சோதனைகளை நடத்தினர்.

இந்த சோதனையைத் தொடர்ந்து ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனிபர், கட்டுமான நிறுவன அதிபர் நிஜாமுதீன், துர்காசங்கர் ஆகியோர் மீது வழக்கு 120பி, (கூட்டுசதி), 420 (மோசடி), 109, லஞ்ச ஒழிப்பு பிரிவு 13டி, 132 ஆகிய 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஐ.பி.எஸ். அதிகாரியான ஜாபர் சேட் கடந்த திமுக ஆட்சியில் போலீஸ் துறையில் முக்கிய பங்கு வகித்தார். திருச்சி மண்டல ஐ.ஜியாக இருந்த அவர் சென்னையில் உளவுப்பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். பின்னர் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக்கப்பட்டார்.

தமிழக சட்டசபை தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு விசுவாசியாக இருப்பதால் இவரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் புகார் அனுப்பின. இதையடுத்து அவரை மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் பார்வையாளராக தேர்தல் கமிஷன் நியமித்தது.

ஆனால், ஜாபர் சேட் அங்கு பணியாற்ற மறுத்து விடுமுறையில் சென்றார். தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

இதையடுத்து அதிமுக அரசு அவரை உளவுத்துறையில் இருந்து அதிரடியாக மாற்றி மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக இடமாற்றம் செய்தது.

சோதனை நடந்த துர்காசங்கரின் தந்தை ராஜமாணிக்கம் முன்பு செய்தித்துறை செயலாளராக இருந்தார். கடந்த ஆட்சியில் கருணாநிதியின் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி வீட்டில் வசித்து வருகிறார். இவரும் துர்காசங்கரும் முறைகேடாக பெற்ற வீட்டு மனைகளை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
TheDirectorate of Vigilance and Anti Corruption officials today conducted raids on the premises of former Intelligence chief MS Jaffer Sait and other officials in connection with the Tamil Nadu Housing Board land allotment case. The residences of Sait, who headed the state intelligence wing in the previousDMK regime, DMK chief M Karunanidhi's Personal security officers (PSO) P Pandian, C Ganesan, C Vinothan and IAS officer K Rajamanickam, one of the secretaries to Karunanidhi when he was Chief Minister were also raided
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X