For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதியூரப்பா கூட்டத்தில் பங்கேற்க எம்எல்ஏக்களுக்கு பாஜக தலைமை தடை

By Chakra
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் முதல்வர் எதியூரப்பா கூட்டும் கூட்டத்தில் பங்கேற்க பாஜக எம்எல்ஏக்களுக்கு அக் கட்சியின் தேசியத் தலைமை தடை விதித்துள்ளது.

சுரங்க ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள எதியூரப்பாவை பதவி விலகுமாறு பாஜக தலைமை உத்தரவிட்டது. ஆனால், அவர் அந்த உத்தரவை நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து பெங்களூரில் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டினார் எதியூரப்பா. ஆனால், இக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது, எதியூரப்பாவை சந்திக்கவும் கூடாது என்று பாஜக எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுவிட்டது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதையும் மீறி கூட்டத்தைக் கூட்டினார் எதியூரப்பா.

ஆனால், அதில் 14 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

English summary
Karnataka CM Yeddyurappa has disobeyed party's order to resign his post after his name is included in the illegal mining report. So, BJP high command has ordered the party MLAs to boycott the meet convened by Yeddyurappa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X