For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 மாதங்களில் இல்லாத அளவுக்கு உணவுப் பணவீக்கம் வீழ்ச்சி!

Google Oneindia Tamil News

மும்பை: கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு உணவுப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜூலை 16-ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கான உணவுப் பணவீக்கம் 7.33 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரம் 7.58 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 18.56 சதவீதமாக இருந்தது உணவுப் பணவீக்கம். இதனைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது மத்திய ரிசர்வ் வங்கி. குறிப்பாக வட்டி வீதங்களை 11 முறை மாற்றியது.

கடைசியாக கடந்த நவம்பர் 2009-ம் ஆண்டுதான் உணவுப் பணவீக்கம் 7.33 அளவுக்குக் கீழே இருந்தது. அதன் பிறகு இப்போதுதான் இந்த நிலையை அடைந்துள்ளது.

உணவு தானியங்கள் விலை 8 சதவீதம் இந்த வாரத்தில் குறைந்திருந்தன. அதேநேரம் வெங்காயம், பழங்கள் விலை கணிசமாக உயர்ந்திருந்தது.

உணவு தானியம் அல்லாத பொருள்களின் விலை, எரிபொருள் விலைகள் கணிசமான உயர்வை இந்த வாரத்தில் சந்தித்தின.

English summary
Food inflation fell to its lowest level in 20 months at 7.33 per cent for the week ended July 16 on the back of cheaper pulses, even as other items grew more expensive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X