For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளி ஸ்பெஷல் ரயில்கள் அனைத்தும் 'ஹவுஸ் புல்'!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்திலும், முன்பதிவு முடிந்துவிட்டது.

வரும் அக்டோபர் மாதம் 26ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. ஆண்டுத்தோறும் சென்னையில் கல்வி மற்றும் வேலைக்காக தங்கியுள்ள பலரும் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், தீபாவளிக்கான ரயில் முன்பதிவு கடந்த 23ம் தேதி துவங்கியது. துவங்கி சில மணிநேரங்களில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான ரயில்களிலும் முன்பதிவு முடிந்தது. அக்டோபர் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை உள்ள அனைத்தும் ஹஸ்புல் ஆகிவிட்டன.

தீபாவளி பண்டிகை அன்று, (அக்.26) தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு நேற்று துவங்கியது. முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே, வழக்கம் போல அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்தது.

தற்போது, பாண்டியன் 205, நெல்லை 97, கன்னியாகுமரி 69, முத்து நகர் 50 என காத்திருப்போர் பட்டிய உள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளான 27ம் தேதி, சென்னைக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு இன்று துவங்குகிறது. தென் மாவட்ட ரயில்களில் இருக்கை வசதி முடிந்துள்ள நிலையில், சிறப்பு ரயில்களை எதிர்நோக்கி பயணிகள் காத்திருக்கின்றனர்.

English summary
Deepavali reservation is almost closed in the trains which comes from southern parts of Tamil Nadu to Chennai on deepavali day (oct.26). Reservation for the next day after Deepavali (oct.27) will begin today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X