For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துனிஷியா முன்னாள் அதிபருக்கு 16 ஆண்டு சிறை

Google Oneindia Tamil News

டுனீஸ்: துனீஷியா நாட்டின் முன்னாள் அதிபர் சைன்எல் அபிடைன் பென்அலி மீதான கடத்தல், ஊழல், சொத்து மோசடி உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை முடிந்து, அதிபருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.

துனீஷியா நாட்டில் 23 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர் சைன்எல் அபிடைன் பென்அலி. இவர் மீது மக்களிடையேயான எதிர்ப்பு அதிகரித்து, போராட்டம் வெடித்தது. இதனால், கடந்த ஜனவரி மாதம் நாட்டை விட்டு, சவுதி அரேபியாவிற்கு தப்பியோடி, அங்கு தலைமறைவானார்.

இந்நிலையில், அதிபர் மீதான போதைப் பொருட்கள், ஆயுதங்கள் பதுக்கல், சொத்து மோசடி, ஊழல் உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை டுனீஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. பென்அலியை தங்களிடம் ஒப்படைக்குமாறு துனீஷிய நாடு எழுப்பியுள்ள கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துவிட்டது.

பென்அலியின் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்த டுனீ்ஸ் நீதிமன்றம் தனது தீ்ர்ப்பில், முன்னாள் அதிபர் பென்அலிக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரது மனைவிக்கு 19 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. மேலும் இருவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

English summary
A Tunisian court has sentenced former President Zine al-Abidine Ben Ali and his wife Leila to 35 years in jail for embezzlement and misusing public funds. But the fleeded Ben Ali is not yet arrested from Saudi Arabia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X