For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

13-ம் தேதிக்குள் தெலுங்கானா மாநிலம், இல்லையெனில் தற்கொலை: சந்திரசேகர் ராவ் மிரட்டல்

By Siva
Google Oneindia Tamil News

Chandrashekar Rao
ஹைதராபாத்: ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படவில்லை என்றால் தான் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா தனி மாநிலம் கோரி ஆந்திராவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த கோரிக்கையை முன்வைத்து தெலுங்கானாவில் அனைத்துக் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் பேசியதாவது,

தெலுங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி இப்பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை வரவேற்கிறேன்.

இத்தனை பேர் ராஜினாமா செய்துள்ளதால் ஆந்திர அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது.

வரும் 13-ம் தேதி நடக்கும் எஸ்.ஐ. தேர்வை அரசு தள்ளி வைக்க வேண்டும். தெலுங்கானாவுக்காக எத்தனையோ போராட்டத்தை நடத்தியுள்ளோம். வரும் 13-ம் தேதிக்குள் மத்திய அரசு தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வேன். எனக்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்றார்.

English summary
Telangana Rashtra Samithi chief K. Chandrashekar Rao has announced that if centre doesn't declare Telangana as aseparate state before august 13, he will commit suicide by consuming poison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X