For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2013-க்குள் 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் ஹெச்எஸ்பிசி

By Siva
Google Oneindia Tamil News

HSBC Logo
லண்டன்: லாபம் பார்க்க போராடும் நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க சர்வதேச வங்கியான ஹெச்எஸ்பிசி முடிவு செய்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஹெச்எஸ்பிசி. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 11.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிப் பங்குகளின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் 11.1 பில்லியனாக இருந்தது.

லத்தீன் அமெரிக்கா, அமெரி்க்கா, இஙகிலாந்து, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வங்கியை மறுசீரமைக்கவுள்ளதால் 5 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியதாக வங்கி அறிவித்துள்ளது. வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைவர் ஸ்டூவர்ட் கூறியதாவது,

பணி நீக்கம் தொடரும். தற்போதில் இருந்து வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 25 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.

மொத்தமுள்ள ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்படவிருக்கின்றனர். ஆசியாவில் அதிக கவனம் செலுத்துவதற்காகத் தான் இந்தி ஆட்குறைப்பு என்று கூறப்படுகின்றது.

உலகெல்லாம் வங்கி அமைக்கும் திட்டத்தை ஹெச்எஸ்பிசி கைவிட்டுள்ளது.

English summary
Banking giant HSBC is going to send 30, 000 employees home as it wants to concentrate in the Asian operations. This job cut will be done from now till the end of 2013. The bank is going to cut 10 percent of the workforce.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X