For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

19 ஆண்டுகள் கழித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா: நிரந்தர உறுப்பினராக ஆர்வம்

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: 19 ஆண்டுகள் கழி்த்து இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் மாதாந்திர தலைமையை ஏற்கிறது.

இது குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது,

இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் தகுதி தனக்கு உள்ளது என்று காண்பிக்கும்.

பாதுகாப்பு கவுன்சிலில் நிலைத்து நிற்கத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். கவுன்சிலின் பணிகளை இந்தியா அரசியல் பக்குவத்துடன் கண்காணிக்கும். அதன் மூலம் தனக்கு நிரந்த உறுப்பினராகும் தகுதி உள்ளது என்பதை நிரூபிக்கும்.

ஆனால் இந்த மாதாந்திர தலைமைக்கும் பாதுகாப்பு கவுன்சிலின் மாற்றத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதை பொது சபை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரி்கக அதிபர் பாரக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மாதாந்திர தலைமைப் பொறுப்பை ஏற்றது. அதற்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அந்த பொறுப்பை இன்று ஏற்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலான ஐ.நா. தூதர்கள் விடுமுறையில செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India assumes the monthly presidency of the UN security council after a period of 19 years. Last time, it assumed the presidency in december 1992. India will use this opportunity to show that it is capable of becoming a permanent member.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X