For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்செக்ஸ்ஸை 'வழிக்குக் கொண்டுவந்த' அமெரிக்க கடன் கொள்கை!

By Shankar
Google Oneindia Tamil News

Mumbai Stock Exchange
மும்பை: தொடர்ந்து நான்கு நாட்கள் தடுமாற்றத்திலிருந்து மும்பை பங்கு சந்தையில் இன்று 117 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது.

அமெரிக்க கடன் கொள்கையில் சாதகமான மாறுதல்களுக்கு அந்நாட்டு இரு அவைகளும் ஒப்புதல் அளித்துவிட்டதாக அதிபர் பாரக் ஒபாமா அறிவித்தததைத் தொடர்ந்து இந்த சாதக நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

மும்பை பங்கு சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸுகி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், விப்ரோ, ஆர்ஐஎல், டாடா பவர், எஸ்பிஐ, ஜிந்தால் ஸ்டீல், ஹீரோ ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஓரளவு நல்ல விலைக்கு கைமாறின.

ஸ்டெர்லைட்,சிப்லா, டிசிஎஸ், டிஎல்எஃப், எட்யுஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தது.

கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து நான்கு தினங்கள் வீழ்ச்சிப் பாதையில் தடுமாறிக் கொண்டிருந்த சென்செக்ஸ் இன்றுதான் சாதக நிலைக்குத் திரும்பியுள்ளது.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 18,352.23 புள்ளிகளில் தொடங்கியது. 117.13 பு‌ள்‌ளிக‌ள் உயர்ந்து 18,314.33 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் குறியீட்டெண் நிஃப்டி 34.80 புள்ளிகள் உயர்ந்து 5,516.80 புள்ளிகளில் முடிவடைந்தது.

English summary
Indian stocks advanced for the first time in five days after U.S. President Barack Obama said lawmakers had agreed a deal on raising the nation’s debt ceiling, easing concerns a default may slow growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X