For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி-ஜாமீன் மனு தள்ளிவைப்பு

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை தள்ளிவைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை சேர்ந்த சவுந்தரராஜன், தனக்கு சொந்தமான இடத்தை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க சென்னை உர் நீதி மன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர். மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது , இது குறித்து போலீசாரிடம் விளக்கம் பெற கால அவகாசம் தேவை என அரசு கூடுதல் வக்கீல் ராமர் கூறியதை அடுத்து விசாரணையை தள்ளிவைக்கப்பட்டது. இதனால், முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி கைதுதாக வாய்ப்பு உள்ளாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

English summary
Hearing on bail plea of Former Minister Dindigul I.Periyasamy has been adjourned in Madurai HC bench. Periyasamy has been booked in a land grab case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X