For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாரையும் நீக்கப் போவதில்லை: ஹெச்எஸ்பிசி தலைவர்

By Siva
Google Oneindia Tamil News

HSBC Logo
லண்டன்: ஹெச்எஸ்பிசி வரும் 2013-ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. இதை அந்த வங்கி மறுத்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஹெச்எஸ்பிசி. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே 5 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும், வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் செய்திகள் வெளியாகின.

இது குறித்து வங்கியின் தலைவர் கூறியதாவது,

நாங்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்பப் போவதில்லை. ஏற்கனவே காலியாக இருக்கும் இடங்களுக்கே ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. பொருளாதாரம் மேலும் வளர்ந்தால் நாங்கள் இன்னும் அதிகமானோரை பணியமர்த்துவோம். மொத்த உற்பத்தி 7.5 சதவீதமாக இருந்தால் நல்லது. இந்தியாவின் மொத்த உற்பத்தி அதே அளவில் தான் உள்ளது. அதனால் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

இந்தியா முழுவதும் அதிக ஆட்களை எடுப்போம் என்று உறுதியளிக்க முடியாது. வங்கி சீரமைப்பின் ஒரு பகுதியாக கடன் மீட்புப் பிரிவில் உள்ள ஒரு சிலரை மட்டும் வங்கியின் பிற பிரிவில் சேருமாறு கூறினோம் என்றார்.

English summary
HSBC has rubbished the news that it is going to cut 30, 000 jobs by the end of 2013. The banking giant CEO says they are finding it difficult to fill certain vacancies and asked few employees in the loan recovery section to shift within the bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X