For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஒருபோதும் சூப்பர் முதல்வராக விரும்பியதில்லை-எதியூரப்பா

Google Oneindia Tamil News

பெங்களூர் சிவானந்த கெளடாவை முதல்வராக்கி, நான் சூப்பர் முதல்வராக திட்டமிடவில்லை. அந்த எண்ணமே எனக்கு இல்லை என்று கூறியுள்ளார் பதவி விலகியுள்ள கர்நாடக முதல்வர் எதியூரப்பா.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ஒருபோதும் சூப்பர் முதல்வராக விரும்பவில்லை, அந்த எண்ணமும் இல்லை. எனது ஆதரவாளரை முதல்வர் பதவியில் அமர்த்தி பின்னாலிருந்து செயல்படும் நோக்கமும் இல்லை என்றார் எதியூரப்பா.

கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக எதியூரப்பாவின்ஆதரவு பெற்ற, அவரது நிபந்தனைப்படி சதானந்த கெளடாவே முதல்வராவார் என்று தெரிகிறது. இதையடுத்து அவருக்குப் பின்னாலிருந்து எதியூரப்பா செயல்படலாம் என்று கருத்து எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோதுதான் மேற்கண்ட பதிலைக் கூறினார் எதியூரப்பா.

மேலும் அவர் கூறுகையில், கட்சித் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, நிதின் கத்காரி போன்றோர் பிறப்பிக்கும் உத்தரவுகளை நான் மதிப்பேன். அப்படித்தான் நான் நடந்து வருகிறேன். அவர்கள்தான் என்னைப் போன்றவர்களை வழி நடத்தி வருகிறார்கள்.

நான் மக்கள் நலனுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எந்த தனிப்பட்ட திட்டமும் இல்லை என்றார் அவர்.

மறு பரிசீலனை செய்ய கோரி எதியூரப்பா மனு

இதற்கிடையே, லோக் ஆயுக்தா அறிக்கையை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே முன்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் எதியூரப்பா.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் என்னை விசாரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை லோக் ஆயுக்தா மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த பரிந்துரை, லோக் ஆயுக்தா சட்டத்திற்கு புறம்பானதாகும். மேலும் அறிக்கையில் பல தவறுகளும் உள்ளன.

எனக்கு எதிரான புகார்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் அறிக்கை குறிப்பிடவில்லை.

மேலும், இந்த அறிக்கையில் உள்ள அனைத்துமே மறு பரிசீலனைக்குரியவைதான்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் என்னை வெகு நாட்களுக்கு துரத்தி வேதனைப்படுத்தும். மேலும் ஆதாரங்கள் இல்லாமல் வெறுமனே குற்றச்சாட்டுக்கள் மட்டும் வைக்கப்பட்டுள்ளதால், எனது தரப்பு நியாயத்தை நிலைநிறுத்த வாய்ப்பளிக்க வேண்டும்.

எனது மனு மீதான விசாரணைக்கு லோக் ஆயுக்தா நாள் குறித்தால் எனது சார்பில் எனது வழக்கறிஞரை அனுப்பி வைக்க முடியும் என்று கூறியுள்ளார் எதியூரப்பா.

English summary
In an apparent bid to reject criticism that he wants to rule by proxy by installing D V Sadananda Gowda as his successor, Chief Minister B S Yeddyurappa today asserted he did not want to become ''a super CM''. "I don't want to become a super CM", he told reporters here as the race for the Chief Minister's post hotted up ahead of the BJP legislative party meeting slated in Bangalore tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X