For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்செக்ஸ் இன்று 204 புள்ளிகள் வீழ்ச்சி!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் இன்று இறங்கு முகம் காணப்பட்டது.

இன்றைய வர்த்தகத்தில் 204 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ். இதன் மூலம் கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்.

காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, பங்கு சந்தையில் சென்செக்ஸ் 18,283.55 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 204.44 பு‌ள்‌ளிக‌ள் குறைந்து 18,109.89 புள்ளிகளில் முடிவடைந்தது.

தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி-60.25 பு‌ள்‌ளிக‌ள்‌ குறைந்து 5,456.55 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

மாருதி, சிப்லா,ஒஎன்ஜிசி, ஹீரோ ஹோண்ட உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஓரளவு நல்ல விலையில் கைமாறின.

பாரதி ஏர்டெல், ஹிண்டல் கோ , எச்டிஎப்சி, ஜிண்டால் ஸ்டீல், டாட்டா பவர், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.

அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

English summary
The BSE benchmark Sensex on Tuesday fell 204 points to a five-week low of 18,109.89 on slowing domestic growth of US economic recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X