For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் புதிய பி.எட். கல்லூரிகள் துவக்க அனுமதி கிடையாது: என்சிடிஇ அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் படித்த வேலையில்லாத ஆசிரியர்கள் அதிகரித்து வருவதால் புதிதாக பி.எட்., ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் துவங்க அனுமதி இல்லை என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 அரசு பி.எட். கல்லூரிகள், 6 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 600 தனியார் சுயநிதி கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லுரிகளில் படித்துவிட்டு ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் பேர் வெளியே வருகின்றனர். ஆனால் அதற்கு தகுந்தவாறு போதிய வேலை வாய்ப்பு இல்லை.

கணிதம், ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் 1995-ம் ஆண்டு பிஎட் முடித்தவர்களுக்கே இன்னும் வேலை கிடைக்கவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் புற்றீசல்கள் போல் பெருகி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் ஆசிரியர் பயிற்சி முடிப்பதால் வேலை கிடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகிறது.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் ஆசிரியர் தேவை, பற்றாக்குறை ஆகியவற்றை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே புதிய பி.எட். கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் துவங்க அனுமதி அளித்து வருகிறது.

தமிழகத்தில் பி.எட்., ஆசிரியர் பயிற்சி முடித்த பலர் வேலையில்லாமல் இருப்பதால் பி.எட்., எம்.எட்., ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பண்டிட் படிப்புகள் கொண்ட புதிய கல்லூரிகள் துவங்க அனுமதியில்லை என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) அறிவித்துள்ளது.

தமிழகத்தை தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களிலும் புதிய ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் துவங்க அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது.

English summary
National council for teacher education(NCTE) has denied permission to start new teacher training institutes and B.Ed. colleges. It has taken this stand as many pass outs from these colleges are struggling to get a job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X