For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக முதல்வராக சதானந்தா கெளடா பதவியேற்றார்- ஷெட்டர், ஆதரவு எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு

Google Oneindia Tamil News

Sadanantha Gowda
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜக எம்.எல்.ஏக்களால் 'ஒரு மனதாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, எதியூரப்பாவின் ஆதரவாளர் சதானந்த கெளடா இன்று முதல்வராகப் பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பரத்வாஜ்,கெளடாவுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் அவர் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக நேற்று நடந்த ரகசிய வாக்கெடுப்பின்போது கடும் அடிதடிக்கு மத்தியில் கெளடா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 117 எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். அதில் கெளடாவுக்கு ஆதரவாக 62 பேரும், ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக 55 பேரும் வாக்களித்தனர்.

இதையடுத்து ஆளுநர் மாளிகைக்குச் சென்று தன்னை முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநரிடம் கடிதம் வழங்கினார் கெளடா. இன்று கர்நாடக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

English summary
Sadanantha Gowda takes oath as Karnataka's new Chief Minister this evening. He is the 26th Chief Minister of the state. He was elected as the new leader of the Legislative party yesterday after a ruckus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X