For Daily Alerts
சென்செக்ஸ் 247 புள்ளிகள் சரிவு!
மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இன்றும் தொடர்ந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 247 புள்ளிகளை இழந்தது மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டி 1 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தது.
நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்தன.
ரிலையன்ஸ், ஐடிசி, என்டிபிசி, டிசிஎஸ், பிஎச்இஎல், ஓஎன்ஜிசி போன்றவற்றின் பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 247 புள்ளிகளை இழந்து 17693 -ல் நிலை பெற்றது. நிப்டியில் 73 புள்ளிகள் சரிந்தன.
கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவின் பொருளாதார நிலை மற்றும் டாலர் மதிப்பு வீழ்ச்சி காரணமாகவே இந்த நிலை என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.