For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது

Google Oneindia Tamil News

Kingdom Tower
ஜெட்டா: உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரை வைத்துள்ள துபாயின் புர்ஜ் கலிபாவை மிஞ்சும் வகையில், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 1000 மீட்டர் உயரத்தில், 160 மாடிகளுடன் கூடிய மகா பிரமாண்டமான கட்டிடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என அழைக்கப்படுவது புர்ஜ் கலிபர் தான். மொத்தம் 822 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில், ஹோட்டல்கள், ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுப் போக்கு தளங்கள் என எண்ணற்ற வசதிகள் உள்ளன.

ஆனால், ஜெட்டாவில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள கட்டிடம் 1000 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். இதற்காக 2 சதுர மைல் பரப்பளவு இடம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கிங்டம் டவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை கட்டப் போவதாக, 2008ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஏற்பட்ட பொருளாதார சரிவு கட்டிடப் பணிகளுக்கு தடையாக அமைந்தது.

உலகப் பொருளாதாரம் சீ்ரடைந்துள்ள நிலையில், சிக்காகோ கட்டிடக் கலை நிபுணர் ஆபிரியன் ஸ்மித் மற்றும் கோர்டன் கில் ஆகியோரின் வடிவமைப்பில் வரும் 2016ம் ஆண்டிற்குள் கிங்டம் டவர் பணிகள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்திற்குள், பிரபல ஹோட்டல்கள், குடியிருப்புகள், சொகுசு அறைகள், அலுவலகங்கள் ஆகியவை அமையும் எனத் தெரிகிறது. கட்டிடத்தின் மொத்த கட்டுமான செலவாக, 20 பில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த கட்டிடத்தின் பணிகள் சவுதி அரேபியாவில் கட்டுமானப் பணிகளில் நிபுணரான இறந்த தீவிரவாதியான பின்லாடனின் நிறுவனமான சவுதி பின்லாடன் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The world's current tallest building is Burj Khalifa in Dubai, United Arab Emirates. It measures 828 meters, 160 stories. This record will be shattered when Kingdom Tower, a giant skyscraper planned for the Saudi Arabian city of Jeddah, is completed by 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X