For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 இந்தியர்களை சுட்டுக் கொன்ற குவைத் போலீஸ்காரர் கைது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: குவைத் நாட்டில் மனநிலைப் பாதிக்கப்பட்டவரால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நரேஷ்குமார், சித்தூரை சேர்ந்த ராமணய்யா மற்றும் மாசாகிரி ஓபுல்ரெட்டி, ராம்பீம் ஆகிய நான்கு பேரும் குவைத் நாட்டில் வேலை செய்து வந்தனர். கடந்த 1ம் தேதியன்று, குவைத்தில் ரம்ஜான் நோன்பு துவங்கியது. அன்று மாலை 4 பேரும் மனநிலை பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொலையாளியை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், நோன்பு முடிய 10 நிமிடங்கள் உள்ள நிலையில் 4 பேரும் உணவு உட்கொண்டதற்காக சுட்டுக் கொன்றதாக தெரிந்தது. இதில் இருவரை சாத் அல் அப்துல்லா என்ற இடத்திலும், மற்ற இருவரையும் சால்மி என்ற இடத்திலும் கொன்றதாக விசாரணையில் தெரிவித்தார்.

ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த போலீஸ்காரரை, அவரது மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்றதும் தெரிந்தது.

English summary
A policeman who killed four Indian nationals in Kuwait, just minutes before the If-tar on August 1. All the four victims are believed to be natives of Andhra Pradesh. The shooter had allegedly killed the workers for eating few minutes before the If-tar. The local cops have said that the shooter was suffering from some mental illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X