For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலையில்லா திண்டாட்டம் 9.1 சதவீதமாக குறைவு: அமெரிக்க அரசு தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: "அமெரி்க்காவில் கடந்த மாதம் 1.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது; வேலையில்லா திண்டாட்டம் 9.1 சதவீதமாக குறைந்துள்ளது," என அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையற்ற போக்கு காணப்படுகிறது. மேலும், பொருளாதாரம் சீரான வளர்ச்சியை பெறாததால் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில், அங்கு புதிய வேலைவாய்ப்புகள் குறித்து கடந்த இரண்டு மாதங்களின் புள்ளி விபரங்களை அமெரிக்க தொழிலாளர் நலத்துறை தீவிரமாக ஆய்வு செய்தது.

இதில், கடந்த இரு மாதங்களை ஒப்பிடுகையில், கடந்த மாதம் அங்கு வேலையில்லா திண்டாட்டம் 9.1 சதவீதமாக குறைந்தது தெரியவந்தது. மேலும், புதிதாக 1.17 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியதாகவும், இது எதிர்பார்த்ததைவிட அதிகம் என அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்தை ஸ்டான்டர்டு அண்டு பூவர்ஸ் தரவரிசை நிறுவனம் குறைத்து மதிப்பீடு செய்ததால், சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் இறக்கம் கண்ட நிலையில், அமெரிக்க தொழிலாளர் நலத்துறையின் அறிவிப்பால் சற்று நிம்மதியடைந்து ஏற்றம் பெற்றது.

ஆனால், கடந்த மாதம் அமெரிக்காவில் சராசரியாக 84,000 புதிய வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டிருக்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

English summary
The US economy generated a net 117,000 jobs in July, a sharp climb from the month earlier, sending the unemployment rate down to 9.1 percent, the Labor Department said on Friday.The department also sharply revised upward the data for the previous two months, which had originally raised concerns that the economy had completely stalled.The better-than-expected numbers came after markets worldwide plunged on worries that the data would show the US economy headed into stagnation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X