For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷீலா தீட்சித்தைக் குறி வைத்து நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் பாஜக-தவிப்பில் அரசு

Google Oneindia Tamil News

Sheila Dikshit
டெல்லி: சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை குறி வைத்து பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் புயலைக்கிளப்பத் தயாராகி வருவதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளது.

டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்து சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஷீலா தீட்சித் மீது கடும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி முறைகேடுகளில் ஷீலா தீட்சித் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளன. ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஷீலாவைக் காப்பாற்றத் துடிப்பதாக காங்கிரஸையும் அது கடுமையாக சாடி வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் நாளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது. கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி உயர்வுப் பிரச்சினை, லோக்பால் மசோதா உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்குள்ளானது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. இந்த நிலையில் தற்போது ஷீலா தீட்சித் மூலம் புதுப் பிரச்சினை உருவெடுத்துள்ளது.

கடந்த வாரம் லோக்சபாவில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பான விவாதம் நடந்தது. இந்த வாரம் ராஜ்யசபாவில் அந்த விவாதம் நடைபெறவுள்ளது.

மேலும் காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கை மீதான விவாதமும் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த ஊழலில் பிரதமர் அலுவலகமும் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் பிரதமருக்கும் கூட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கல்மாடி நியமனத்தில் பிரதமர் அலுவலகத்தை சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The UPA government is bracing for the second week of the monsoon session of Parliament, which will focus on the CAG report on Commonwealth Games, indicting the Prime Minister Office and the Delhi government over massive corruption that marked the organisation of the 2010 Games in the capital. The CAG report tabled in both the Houses of Parliament on the last day of the preceding week, contains damaging comments on both the Delhi Government and the PMO that would be giving enough fuel to the Opposition to keep the fire of attack burning at least for the whole week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X