For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை வான் பகுதியி்ல அதிரடியாக பறந்த 10 அமெரிக்க போர் விமானங்கள்

Google Oneindia Tamil News

US Fighter Jets
கொழும்பு : இலங்கை வான் பகுதிக்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 10 போர் விமானங்கள் சிறிது நேரம் பறந்த பின்னர் அங்கிருந்து சென்றது இலங்கையை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்க போர் விமானங்கள் அத்து மீறி விட்டதாக இலங்கை புலம்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவிடம் முறைப்படி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்த விமானங்கள் அனைத்தும் அமெரிக்க கடற்படையின் 7வது பிரிவைச் சேர்ந்தவையாகும். பிதுருதலகலா என்ற இடத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள இலங்கை கண்காணிப்பு ரேடார்களில் அமெரிக்க போர் விமானங்கள் ஊடுறுவியது பதிவாகியுள்ளதாம்.

இதையடுத்து உடனடியாக இலங்கை சிவில் விமான அதிகாரிகளுக்கும், விமானப்படைக்கும் தகவல்கள் போனதாம்.

இதுகுறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் நிமலசிறி கூறுகையில், அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. இது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் புகார் தரப்படவுள்ளது என்றார்.

ஆனால் அமெரிக்கத் தரப்பில் இத்தகவலை உறுதிப்படுத்த மறுத்து விட்டனர்.

English summary
10 fighter jets from US navy's 7th fleet flown over Lankan air space for some time. Sri Lanka has been expressed shock and anger over this. The officials in External affairs ministry said, We will lodge a complaint with US embassy in Colombo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X