For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்மதியன் கவிதை நூல் வெளியீட்டு விழா: க. அன்பழகன் வெளியீடு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கவிச்சிங்கம் கண்மதியனின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று(9-ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடக்கிறது.

இந்த விழாவுக்கு கலைமாமணி மா. செங்குட்டுவன் தலைமை தாங்குகிறார், மேனாள் மாநகரத்தலைவர் சா.கணேசன், முனைவர் புரட்சிதாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

வா.மு.சே. திருவள்ளுவர் வரவேற்புரை ஆற்ற, நூலை இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். முதல் பதிப்பை மாம்பலம் ஆ. சந்திரசேகர் பெற்றுக் கொள்கிறார்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆய்வுரை வழங்குகிறார். வழக்குரைஞர் அருள்மொழி, கவிக்கோ ஞானச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, கவிச்சிங்கம் கண்மதியன் ஏற்புரை வழங்குகிறார்.

இளவரச அமிழ்தன் நன்றியுரையுடன் விழா முடிவடையும்.

முன்னதாக மாலை 5 மணிக்கு விழாவிற்கு வருபவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

English summary
Poet Kanmathiyan's poetry book will be released today at Devaneya Pavanar library hall in Chennai. K. Anbazhagan will release the book and give a speech. Mambalam A. Chandrasekar will get the first copy of the book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X