For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரத்த பரிசோதனையில் 15 நிமிடங்களில் எய்ட்ஸ் தாக்குதலை அறியும் நவீன கருவி

Google Oneindia Tamil News

நியூயார்க் : எய்ட்ஸ் நோய் தாக்கத்தை 15 நிமிடங்களில் கண்டறியும் புதிய 'சிப்'பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே மனிதன் பயப்படும் நோய்களில் மருந்து இல்லாததும், பீதியை ஏற்படுத்துவதுமான எய்ட்ஸ் நோயை கண்டறிய பல ரத்த பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. மேலும் அதன் ரிசல்ட் கிடைக்கவும் பல நாட்கள் முதல் வாரங்கள் வரை ஆகிறது.

இதில் பலர் மனதளவில் பெரும் சிரமத்திற்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனர். எய்ட்ஸ் நோயை மிக விரைவாக கண்டறியும் ஆராய்ச்சியில், கொலம்பியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டது. இதில், பல சோதனைகளுக்கு பிறகு எய்ட்ஸ் நோயை 15 நிமிடங்களில் கண்டறிந்து உறுதிப்படுத்தும், 'சிப்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

எம் சிப் எனப் பெயரிடப்பட்டுள்ள இதன் விலை இந்திய மதிப்பில் 50 முதல் 100 ரூபாய்க்குள் மட்டுமே. கைக்கு அடக்கமான இந்த சிப்பை எங்கும் எடுத்து செல்லலாம். ஒரு சொட்டு ரத்தத்தை சிப்பின் குறிப்பிட்ட பகுதியில் செலுத்தப்படுகிறது. அப்போது, சிப்பினுள் ரத்த பிளாஸ்மா தட்டுகள், 'பயோ-மார்க்கர்'களுடன் வேதிவினை நடக்கிறது. நோய்த் தாக்கம் உள்ள நிலையில் அதற்கான லைட் ஒளிர்கிறது.

இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், எய்ட்ஸ் மட்டுமல்லாது, பால்வினை நோய், சில வகையான கேன்சர் நோய்கள், காசநோய் தாக்குதலையும் அறிய பயன்படுத்தலாம்.

ஆப்பிரிக்காவின் கிகாலி, சுவாண்டா நகரங்களில் உள்ளவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில், 100 பேரிடம் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தபடியாக, கர்ப்பணிகளிடையே பரிசோதனை நடத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

English summary
The “M Chip,” a piece of plastic, about the size of a credit card and costing just two to three dollars can analyze the blood sample from a pin prick with the help of an equally cheap optical sensor, and detect viruses and diseases that usually take weeks to conclude in third world countries. The drop of blood then separates and the plasma reacts with bio-markers from specific diseases. If a disease is present, a signal will light up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X