For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேலும் 2 அப்பீல் மனுக்கள் தாக்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேலும் 2 அப்பீல் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பாகமாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம் அமைப்புக்கும், 2 பங்கை இந்து அமைப்புகளுக்கும் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகாரா, அகில பாரத இந்து மகாசபை, ஜமாத் உலமா இ ஹிந்த், சன்னி மத்திய வக்பு வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கந்த செப்டம்பர் மாதம் 30ம்தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் பரூக் அகமது என்பவரும், பாரீய ஸ்ரீராம் ஜென்மபூமி சமிதி ஆகியோர் சார்பில் இரண்டு அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை அனுமதித்த நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனுக்களுடன் சேர்த்து இவை விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனர்.

English summary
The Supreme Court on Monday admitted two more petitions challenging the Allahabad High Court verdict that divided the disputed site in Ayodhya into three parts and directed them to be given to the parties to the civil dispute. A Bench of Justices Aftab Alam and R. M. Lodha directed the petitions filed by Akhil Bhartiya Shri Ram Janmabhoomi Samiti and one Farooq to be tagged with a batch of petitions, on which the Bench, on May 9, stayed the September 30, 2010 verdict of the High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X